posted 28th November 2026
Promotional Offer உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement
Promotional Offer உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement
ஒரு சிறு கவிதையினை இங்கு தருகின்றேன். உள்ளுணர்வுடன் சுவாசியுங்கள்.
பாசத்தின் சக்தியும், பலமும்.
அம்மா, அம்மா! என்னை ஏன் பெத்தாய்?
அழுதாயா அம்மா?
என்னை நீ பெற்றெடுக்கையிலே
செத்துப் பிறந்தாயல்லவா?
அன்று மட்டும்தான் நீ அழுதாயே!
பிறக்கையில் குழந்தைகள் அழுகையிலே
நானும்தான் அழுதேன், அவர்கள் போல
ஆனால், நானோ,
தினமும் அழுகின்றேன்! மனமோ நொறுங்கியதால்
விளங்குகின்றதா அம்மா?
நீயோ போய் விட்டாய் அம்மா,
ஆண்டவன் அடியில் நிம்மதியாய் நீ இருக்கின்றாய்
உனது தொப்புள் கொடியினால் உதித்தவர்கள்
விலகி விட்டனரே! வெறுத்தொதுக்கினரே!
தனிமையில் தவிக்கின்றேன்,
தாய் உன்னை நினைக்கின்றேன்
நினைத்தாலும், உன்மடி எனக்கில்லையே!
நீயோ அயலில் இருக்க வாய்ப்பில்லையே!
வாழ்க்கையும் விரக்தியாச்சுத்தான்!
அதுவோ விரையமாகவில்லையே!
அழிக்கப் பிறந்த சக்திகளை அடக்கினேன்
ஆர்வத்துடன் நடந்தேன்! கசந்த வாழ்க்கை இனித்தது.
காத்திருந்த வாழ்க்கையோ கிடைத்து
இதுதான் உனது வாழ்த்தோ, புரிந்து விட்டது
தாய் என்றால் நீதான் அம்மா
நானிலத்தில் நீ ஒருத்திதானம்மா!
பிறக்க வைத்த பலன்களைத் தந்துவிட்டாய்!
கோடி நன்றியம்மா, கோபுரத்தின் உச்சியில்
உன் தியாகமும், தியானமும் எப்பவும் நிலைக்கும்.